``நீங்க தலையிடாதீங்க'' - நாசூக்காக டிரம்ப்பை நோஸ்கட் செய்த இந்தியா
சீனாவுடனான எல்லைப் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா முன்வந்த நிலையில், இந்தியா நுட்பமாக நிராகரித்துள்ளது... பிரதமர் மோடி உடனான சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நீண்டகாலமாக நிலவும் எல்லை பதற்றத்தைத் தீர்க்க உதவுவதாக விருப்பம் தெரிவித்தார். ஆனால், டிரம்ப்பின் கருத்துக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, சீனா உள்ளிட்ட இந்தியாவின் அண்டை நாடுகளுடனான பிரச்சினைகளைக் கையாளுவதில் இந்தியா இருதரப்பு அணுகுமுறையை கையாளுவதாக மீண்டும் வலியுறுத்திய நிலையில், இவ்விவகாரத்தில் 3ம் நபரின் தலையீடு தேவையில்லை என்பதை இந்தியா மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது...
Next Story
