

கால்பந்தாட்ட வீரர் மரடோனாவின் மறைவுக்கு உலக முழுவதும் உள்ள ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில், மரடோனாவுக்கு மணல் சிற்பம் வடித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், வி வில் மிஸ் யூ யுவர் கோல் என அதில், எழுதியுள்ளார்.