குக்கி பழங்குடியின தலைவர் சுட்டுக் கொலை - ஓடிக்கொண்டிருந்த கார் கண்ணாடியை துளைத்த குண்டு

x

மணிப்பூர் மாநிலம் சுரசந்த்பூரில் (Churachandpur) காரில் சென்ற குக்கி பழங்குடியின முக்கிய தலைவர் உட்பட 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

மோங்ஜாங் பகுதியில், 60 வயது பெண் உட்பட 4 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள், காரை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளனர். இதில், 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அந்த இடத்தில் 12 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களில் ஒருவர், குக்கி தேசிய படையின் முக்கிய தலைவர் என தெரியவந்துள்ளது. இந்த படுகொலைக்கு ஐக்கிய குக்கி தேசிய விடுதலை முன்னணி அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினர், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்