

லட்சத்தீவு விவகாரத்தில் தேசத்துரோக வழக்கு..தன் அனுபவத்தை திரைப்படமாக்கும் ஆயிஷா
லட்சத்தீவு விவகாரத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை திரைப்படமாக எடுக்கப் போவதாக இயக்குநரும் நடிகையுமான ஆயிஷா சுல்தானா அறிவித்துள்ளார். லட்சத்தீவில் அமல்படுத்தப்பட்ட புதிய சட்டங்களை கண்டித்து புதிய நிர்வாக அதிகாரி பிரபுல் பட்டேலுக்கு எதிராக ஆயுஷா கருத்து தெரிவித்தார். இதற்காக, அவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு 3 முறை லட்சத்தீவில் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. தற்போது, கொச்சி திரும்பிய அவர் இந்த விவகாரம் குறித்து தான் எடுக்கும் திரைப்படம் மூலம் தனக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அனைவருக்கும் தெரியவரும் என தெரிவித்துள்ளார்.