Train | Viral Video | பர்ஸை தொலைத்த ஆத்திரத்தில் ரயில் கண்ணாடியை உடைத்த பெண் - தீயாய் பரவும் வீடியோ
இந்தூர்-டெல்லி மார்க்கத்தில் சென்றதாக கூறப்படும் ஒரு ரயிலில் தனது குழந்தையுடன் ஏ.சி. பெட்டியில் பயணித்த பெண், தனது பர்ஸை தொலைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரயில்வே போலீசாரிடம் முறையிட்டும் அதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த அந்தப் பெண், திடீரென ரயில் கண்ணாடியை உடைக்கத் தொடங்கினார். உடன் இருந்த பயணிகள் சமாதானம் செய்தும், அதைப் பொருட்படுத்தாமல் கண்ணாடியை உடைத்துக்கொண்டிருந்தார். இதுகுறித்த காட்சிகள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
Next Story
