"ரயில் சேவை நிறுத்தப்படாது-வதந்திகளை நம்ப வேண்டாம்"

"ரயில் சேவை நிறுத்தப்படாது-வதந்திகளை நம்ப வேண்டாம்"
"ரயில் சேவை நிறுத்தப்படாது-வதந்திகளை நம்ப வேண்டாம்"
Published on

"ரயில் சேவை நிறுத்தப்படாது-வதந்திகளை நம்ப வேண்டாம்"

அனைத்துவித ரயில் சேவைகளும் தொடர்ந்து இயக்கப்படும் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ரயில்வே வாரிய தலைவர் சுனித் ஷர்மா தெரிவித்துள்ளார்.காணொலி காட்சி வாயிலாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,இந்திய ரயில்வே சார்பாக நாள்தோறும் சராசரியாக 1490 ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.தேவை ஏற்பட்டால் கூடுதலான ரயில் சேவைகளையும் இயக்கும் திறன் இந்திய ரயில்வேக்கு இருப்பதாக குறிப்பிட்ட அவர் தற்போது 70% அளவுக்கு ரயில் சேவை இயக்கப்படுவதாக தெரிவித்தார்.தேவைக்கேற்ப ரயில் சேவைகளை வழங்கும் திறன் உள்ளதாகவும், அதற்கேற்ப ரயில்வே ஊழியர்கள் தயாராக இருப்பதாகவும் ரயில்வே வாரியத் தலைவர் சுனித் ஷர்மா குறிப்பிட்டார்.கொரோனா சிகிச்சைக்காக இந்திய ரயில்வேயின் சார்பில் 4000 கொரோனா சிறப்பு பெட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.அனைத்து விதமான ரயில்களும் தொடர்ந்து இயக்கப்படும் எனவும், எனவே வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் சுனித் சர்மா திட்டவட்டமாக தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com