கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சிறுவன் உயிரிழந்த பரிதாபம்

x

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கடவூர் பகுதியில் மூவாட்டுபுழா - வண்ணப்புரம் சாலையில் தனியார் பேருந்து நின்று கொண்டிருந்தபோது, பேருந்தின் முன்பு பாதசாரிகள் கடப்பதற்கான வரிக்கோட்டுப் பாதையில் சாலையை கடக்க முயன்ற பிலால்(6), வயது சிறுவன் மீது பேருந்தை முந்தி செல்ல அசுரவேகத்தில் வந்த கார் மோதியது. இதில், 6 வயது சிறுவன் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது, விபத்திற்குள்ளான பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்