பிரபல யூடியூபருக்கு நேர்ந்த கதி - உயிரை உறைய வைத்த வீடியோ

x

ஒடிசாவில் அருவியை படம்பிடித்த யூடியூபர் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

யூடியூபர் சாகர் டுடூ Sagar Tudu என்பவர், கோரபுட் Koraput மாவட்டத்தில் உள்ள துடுமா Duduma நீர்வீழ்ச்சிக்கு நண்பர்களுடன் சென்றிருந்தார். அருவியின் மையப் பகுதிக்குச் சென்று வீடியோ எடுத்துக்கொண்டிருந்தபோது, அருவியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார். உடனிருந்த நண்பர்கள் கயிறு மூலம் அவரை மீட்க முயன்றும் பயனில்லாமல் போனது

சாகரை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டனர். ரீல்ஸ் மோகத்தால் யூடியூபர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்