நிச்சயத்திற்கு சென்ற வழியில் பேரதிர்ச்சி - வலியில் அலறி துடித்த குடும்பம்
மலப்புறம் மாவட்டத்திலுள்ள கோட்டக்கல் பகுதியில் இருந்து பொன்னானியில் நடைபெறவிருந்த திருமண நிச்சயதார்த்தத்திற்காக திருமண வீட்டார் பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது முன் சென்ற காரில் மோதி கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்ததில், பேருந்தில் இருந்த சிறுவன் உட்பட ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையின் கிரேன் உதவியுடன் கவிழ்ந்த பேருந்தை அப்புறப்படுத்தினர்.
Next Story
