எரிந்து கருகிய குடிசை தெலுங்கானாவில் சோகம்

x

தெலங்கானாவில் 30 குடிசைகள் எரிந்து நாசமானதில் 30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. தெலங்கானா மாநிலம் ரெங்காரெட்டி மாவட்டத்தில் இருக்கும் குட்லூரு கிராமத்தில் ஏழைப் பொதுமக்கள் பெரும்பாலும் குடிசை வீடுகளை அமைத்து தங்கி உள்ளனர். திடீரென்று அங்குள்ள வீடு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அடுத்தடுத்த வீடுகளுக்கு பரவி 30 குடிசைகள் எரிந்து சாம்பல் ஆனது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்