தீய சக்திகளை விரட்டும் பாரம்பரிய திருவிழா | ஆடல் பாடலுடன் கோலாகலம்
தீய சக்திகளை விரட்டும் மார்பத் திருவிழா - கோலாகலம்
மகாராஷ்டிராவில் ஆடல் பாடலுடன் மேளதாளம் முழங்க மார்பத் திருவிழா ஊர்வலம் கோலாகலமாக நடந்தது.
நாக்பூரில், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் பாரம்பரிய மார்பத் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் மூங்கில், காகிதம் மற்றும் துணியால் செய்யப்பட்ட மார்பத் எனப்படும் பிரமாண்ட உருவம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த உருவத்தை எரிப்பதன் மூலம் தீய சக்திகள், சமூக தீமைகள் விலகி நன்மை கிடைக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
Next Story
