பிரபல சுற்றுலா தலமான ஊசுட்டேரியை தூர் வார வேண்டும் - சுற்றுலா பயணிகள்

புதுச்சேரியின் பிரபல சுற்றுலா தலமான ஊசுட்டேரியை தூர் வார வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பிரபல சுற்றுலா தலமான ஊசுட்டேரியை தூர் வார வேண்டும் - சுற்றுலா பயணிகள்
Published on
புதுச்சேரியின் பிரபல சுற்றுலா தலமான ஊசுட்டேரியை தூர் வார வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கடல் போல் காட்சியளித்த ஊசுட்டேரி, தற்போது கடும் வறட்சி காரணமாக தண்ணீர் குறைந்து குளம் போல் காணப்படுகிறது. இதனால் படகு சவாரி கரையோரம் மட்டுமே நடைபெறுகிறது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகளின் எண்ணிக்கை முழுவதுமாக குறைந்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து வருகிறது. எனவே உடனடியாக ஏரியை தூர் வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com