

லடாக் யூனியன் பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். லடாக் நிர்வாகம் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளித்து உள்ளது. இதனால், நீண்ட நாட்களுக்குப் பிறகு, லே உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள், படகு சவாரி செய்தும், பைக் ரைடில் ஈடுபட்டும் மகிழ்ச்சி அடைந்தனர்.