பார்க்கும் பெண்களிடமெல்லாம் அசிங்கம் செய்த டூரிஸ்ட்.. ரவுண்டு கட்டி வெளுத்த மக்கள்

x

உத்தரகாண்டில், பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சுற்றுலா பயணிக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலை அடுத்த ராம்நகர், திக்குலி பகுதியில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் ரிசார்ட்டில் தங்கியிருந்தார். இவர் அருகில் உள்ள கடைக்கு பொருட்களை வாங்கச் சென்றபோது, அப்பகுதியில் உள்ள இளம்பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதோடு வலுக்கட்டாயமாக தனது தொலைபேசி எண்ணை கொடுத்ததாக கூறப்படுகிறது.. இதற்கு பெண்கள் மற்றும் அவர்களது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த சுற்றுலா பயணி, தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மிரட்டியுள்ளார். இதையடுத்து, அவரிடம் இருந்த துப்பாக்கியை அங்கு வந்த பொதுமக்கள் பறித்ததுடன், தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்