பாறையில் இருந்து வழுக்கி 70 அடி பள்ளத்தில் விழுந்த சுற்றுலா பயணி
கேரள மாநிலம் இடுக்கியில் 70 அடி பள்ளத்தில் தவறி விழுந்த சுற்றுலா பயணி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், அவரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.வண்ணபுரத்தை சேர்ந்த ஷாம் ஜார்ஜ் தனது நண்பர்களுடன் மலை ஏறிக் கொண்டிருந்தபோது மழை பெய்ததால் பாறையில் இருந்து வழுக்கி 70 அடி பள்ளத்தில் விழுந்தார். இதில் காயங்களுடன் உயிர் தப்பிய அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Next Story
