ஆர்ப்பரித்து ஓடும் மழைவெள்ளம்.. ஆபத்தின் நுனியில் ஆற்றைக் கடந்த இளைஞர்..! திகில் வீடியோ
அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், இளைஞர் ஒருவர் மழைவெள்ளம் ஆர்ப்பரித்து ஓடும் ஆற்றை ஆபத்தான முறையில் கடக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. சீனா மற்றும் மியான்மர் எல்லையை ஒட்டிய அஞ்சாவ் மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய தொங்கு பாலத்தை, இளைஞர் ஒருவர் ஆபத்தான முறையில் கடந்து செல்லும் இந்த வீடியோவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ள கிரண் ரிஜிஜு, அரசு தேவையான உதவிகளை வழங்கும் என உறுதி அளித்துள்ளார்.
Next Story
