பஞ்சாபை புரட்டி போட்ட கனமழை - நடுங்கவிடும் பலி எண்ணிக்கை
பஞ்சாப்பில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது.
பஞ்சாப்பில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து அம்மாநில அரசு புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி,
அம்ரித்சர், பதின்டா, பெரோஸ்பூர் உட்பட 23 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாகவும், 3 லட்சத்து 54 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ள பாதிப்புகளை எதிர்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் பகுதியில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர், படகில் சென்று நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
Next Story
