Farmers protest || நெடுஞ்சாலையில் டன் கணக்கில் கொட்டப்பட்ட மாங்காய்கள்
மாங்காய்களுக்கு உரிய ஆதார விலை வழங்கவேண்டும் மற்றும் கர்நாடகாவில் விளைந்த மாங்காய்களை ஆந்திராவி விற்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோலார் மாவட்ட விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலையில் மாங்காய்களை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்,
தற்போது கர்நாடகாவில் விளையும் மாங்காய்களின் தற்போதைய ஆதாரவிலை டன்னுக்கு 3000 முதல் 4000 ரூபாயாக உள்ளது. இதை 10000 முதல் 11 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்ததை அரசு ஏற்காததை கண்டித்தும், கர்நாடக மாங்காய்களுக்கு ஆந்திராவில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோலார் மாவட்ட விவசாயிகள் சாலையில் மாங்காய்களை கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
Next Story
