பைக்குகளுக்கும் சுங்கக் கட்டணம்? - தீயாய் பரவிய தகவல்.. NHAI கொடுத்த விளக்கம்

x

தேசிய நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கும் திட்டம் எதுவும் இல்லை என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இருசக்கர வாகனங்களுக்கும் சுங்கக்கட்டணம் வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், இந்த தகவலை மறுத்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இருசக்கர வாகனங்களுக்கும் சுங்கக்கட்டணம் என தவறான தகவல் பரவி வருவதாகவும், இருசக்கர வாகனங்களுக்கான சுங்கக் கட்டணத்தில் முழுமையான விலக்கு தொடரும் எனவும் உறுதி அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்