பஞ்சாப்பில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் 109 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். பஞ்சாப்பின் சாங்ரூர் நகரில் உள்ள பகவான்புரா கிராமத்தை சேர்ந்த பதேவீர் என்ற 2 வயது சிறுவன், வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்து விட்டான். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர் கிணற்றின் அருகே மற்றொரு குழி தோண்டி சுமார் 109 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சிறுவனை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். உடனடியாக அந்த சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.