Today Top News Headlines || Thanthi TV
கோவை, நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு... சென்னை உட்பட தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...
மேற்குவங்கம், துர்காபூரில் மருத்துவக்கல்லூரி மாணவி கூட்டுபாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்... கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது...
போர் நிறுத்தத்தை தொடர்ந்து, காசா நகருக்குள் 2 லட்சம் பாலஸ்தீனியர்கள் திரும்பத் தொடங்கியுள்ளனர்.... லாரிகளை சூழ்ந்து உணவுப் பொருட்களை போட்டிப்போட்டுக்கொண்டு அள்ளிக்கொண்டு சென்றனர்...
காசாவில் உள்ள பணயக் கைதிகள் நாளை விடுவிக்கப்படுவார்கள் என ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது... இவாங்கா டிரம்ப், அமெரிக்க தூதருடன் ஊர்வலம் சென்ற இஸ்ரேலியர்கள், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவித்தனர்...
மகளிர் உலகக் கோப்பை 13ஆவது லீக் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோத உள்ளன... விசாகப்பட்டினத்தில் பிற்பகல் 3 மணிக்கு போட்டி நடைபெறுகிறது...
பாகிஸ்தானை ஒட்டிய ஆப்கானிஸ்தான் எல்லைப்புற பகுதிகளில், இரு நாட்டு ராணுவமும் பயங்கர தாக்குதல் நடத்தின... செக்போஸ்ட்களை அழித்துவிட்டதாக இருநாட்டு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது...
