இன்று குடியரசு துணைத்தலைவர் தேர்தல் | PM Modi

x

குடியரசு துணைத்தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி சார்பில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி. சுதர்சன் ரெட்டியும் குடியரசு துணைத்தலைவருக்கான தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் ஒத்திகை வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்நிகழ்வில், எதிர்க்கட்சிகள் சார்பில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனிடையே, பிஜூ ஜனதா தளம் மற்றும் பிஆர்எஸ் கட்சிகள் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்