

இன்று அன்னையர் தினக் கொண்டாட்டம்... மணற்சிற்பம் செய்து அசத்திய ஒரிசா கலைஞர்
ஒடிசாவின் பூரி நகரில் உள்ள கடற்கரையில், மணற்சிற்பக் கலைஞர் ஒருவர் அன்னையர் தினத்தை முன்னிட்டு, மணற் சிற்பம் செய்து அசத்தியுள்ளார். இது குறித்து இந்த மணற்சிற்பத்தை வடிவமைத்த சுதர்சன் பட்னாயக் தெரிவிக்கையில், அனைத்து தாய்மார்களுக்கும் இதை அர்ப்பணிப்பதாகவும், குறிப்பாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் முன்களப் பணியாளர்களாகப் பணியாற்றும் ஒவ்வொரு தாய்க்கும் இதை சமர்ப்பிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.