காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (11-12-2023) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (11-12-2023) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
  • மிக் ஜாம் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய, இன்று சென்னை வருகிறது மத்திய குழு...... 2 நாள் ஆய்வுக்கு பின், தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்..
  • 9 நாட்களுக்குப் பிறகு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகள் திறப்பு... 4 மாவட்டங்களிலும் 14 பள்ளிகள் மட்டும் திறக்க முடியாத நிலை இருப்பதாக கல்வித்துறை தகவல்.
  • அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியீடு... 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு வரும் 13 முதல் 22-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு...
  • புயலால் சேதமடைந்த சான்றிதழ்களை கட்டணமின்றி வழங்க காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் இன்று சிறப்பு முகாம்...சென்னை மாவட்டத்தில் நாளை சிறப்பு முகாம் நடக்கிறது
  • மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட வாகனங்களின் பழுதை நீக்க சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு ஏற்பாடு... தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் கட்டணமில்லா உதவி எண்கள் அறிவிப்பு...
  • சென்னை எர்ணாவூரில், மழைநீருடன் கச்சா எண்ணெய் கலந்த விவகாரத்தில், இந்திய கடலோர காவல்படை அடுத்த திட்டம்.... ஹெலிகாப்டர்கள் மூலம் ரசாயனம் தூவி எண்ணெய் படலத்தை திரிப்பதற்கான நடவடிக்கை தீவிரம்...
  • சென்னை கொடுங்கையூர் அமுதம் நகர், காவேரி நகர், ராகவா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீர்... கறுப்பு நிறமாக மாறி இருப்பதால் பொதுமக்கள் பெரும் சிரமம்...
  • இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து... டாஸ் கூட போடாமல் ரத்தானதால் ரசிகர்கள் ஏமாற்றம்...
  • இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய மகளிர் அணி ஆறுதல் வெற்றி... 2க்கு 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது, இங்கிலாந்து அணி...

Next Story

மேலும் செய்திகள்