TN Political Parties | தமிழ்நாட்டில் 22 கட்சிகளை நீக்கி தேர்தல் ஆணையம் அதிரடி
தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்படாத 22 கட்சிகளை நீக்கி தேர்தல் ஆணையம் அதிரடி
நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகளை இந்திய தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 22 அரசியல் கட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும், தற்போது 6 தேசிய கட்சிகள் , 67 மாநில கட்சிகள் மற்றும், 2 ஆயிரத்து 854 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் உள்ளன.
தேர்தல் ஆணைத்தின் விதிகளின்படி, ஒரு கட்சி தொடர்ந்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடவில்லை எனில், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலில் இருந்து அந்த கட்சி நீக்கப்படும்.
இந்நிலையில், மாநில தேர்தல் அதிகாரிகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், தேர்தல் ஆணைய விதிகளை மீறியதாக, நாடு முழுவதும் 334 அரசியல் கட்சிகளின் பெயர்களை இந்திய தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.
இதில், தமிழ்நாட்டில் மட்டும் 22 அரசியல் கட்சிகளின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
இந்த கட்சிகள், இனி நடைபெறும் தேர்தல்களில் சின்னம் ஒதுக்கீடு உள்ளிட்ட எந்தவொரு சலுகையையும் பெற முடியாது.
மேலும், இந்த கட்சிகள் 30 நாட்களில் இந்திய தேர்தல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
