முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தாலும், 2வது பிரசவத்திற்கும் அரசு விடுமுறை உண்டு" - தமிழக அரசு விளக்கம்

அரசு பெண் ஊழியர்களுக்கு, முதல் பிரசவத்தில் இரு குழந்தைகள் பிறந்தாலும், இரண்டாவது பிரசவத்திற்கு அரசின் மகப்பேறு விடுமுறை உண்டு என, தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தாலும், 2வது பிரசவத்திற்கும் அரசு விடுமுறை உண்டு" - தமிழக அரசு விளக்கம்
Published on

அரசுத்துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், இரு குழந்தைகளுக்கு மகப்பேறு விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில், 6 மாதங்களாக இருந்த இந்த விடுமுறை, 9 மாதங்களாகவும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துவிட்டால், அதை காரணம் காட்டி, இரண்டாவது பிரசவத்திற்கு விடுமுறை அளிக்க, பல்வேறு துறைகளில் மறுப்பு தெரிவிக்கப்படுவதாக, அரசுக்கு தகவல்கள் வந்தன. இந்த விவகாரம் குறித்து, தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்திருந்தாலும், இரண்டாவது பிரசவத்திற்கு அரசின் மகப்பேறு விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com