செங்கல்பட்டை அடுத்த பொத்தேரியில் தேசிய அளவிலான ஆட்டிசம் குறைபாடு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதனை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், இந்தியாவில் ஆட்டிசம் குறைபாடு அதிகளவில் உள்ளதாகவும், வரும் காலங்களில் அதனை களையும் வகையில் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.