திருப்பதி : ஏழுமலையான் கோவில் அருகே தற்கொலை செய்ய வந்த பெண்ணை தாக்கிய கரடி

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தற்கொலை செய்து கொள்ள வந்த பெண்ணை கரடி தாக்கியது.
திருப்பதி : ஏழுமலையான் கோவில் அருகே தற்கொலை செய்ய வந்த பெண்ணை தாக்கிய கரடி
Published on
திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தற்கொலை செய்து கொள்ள வந்த பெண்ணை கரடி தாக்கியது. திருமலையில் உள்ள வனப்பகுதிக்கு அருகே கரடி ஒன்று, விஜயலட்சுமி என்ற பெண்ணை தாக்கியுள்ளது. சப்தம் கேட்டு அங்கிருந்த மடத்தில் பணிபுரிபவர்கள் சென்று பார்த்தபோது, கரடி தப்பி சென்றுள்ளது. இதையடுத்து விஜயலட்சுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் இருந்து வெளியேறிய விஜயலட்சுமி, தற்கொலை செய்வதற்காக திருப்பதி வந்து வனப்பகுதிக்கு சென்ற போது கரடி தாக்கியது தெரிய வந்தது.
X

Thanthi TV
www.thanthitv.com