தடை விதிக்கணும் - திருப்பதி தேவஸ்தானம் திடீர் கடிதம் | Tirupati | Tirupati devasthanam
திருப்பதி திருமலை மீது விமானங்கள் பறக்கத் தடைவிதிக்க வேண்டும் என தேவஸ்தான அறங்காவல் குழு தலைவர் பி.ஆர். நாயுடு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கிஞ்சரபு ராம்மோகன் நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ஆகம சாஸ்திரத்தின் அடிப்படையில் கோயிலின் புனிதத்தன்மை, பாதுகாப்பு மற்றும் பக்தர்களின் உணர்வுகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. திருமலை மீது தாழ்வாக விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறப்பதால் ஏற்படும் தொந்தரவு தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
Next Story
