Tirupati | Tirumala | திருமலையில் நள்ளிரவில் பாதுகாப்பு ஒத்திகையால் பரபரப்பு

திருப்பதி திருமலையின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், ஆக்டோபஸ் சிறப்புப் பாதுகாப்புப் படையினர் நள்ளிரவில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர். துப்பாக்கிகளுடன் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் திடீரென விஜிலென்ஸ் அலுவலகம் மற்றும் பாதுகாவலர் தங்குமிடம் புகுந்து, பிணைக் கைதிகளை மீட்பது போல ஒத்திகை நடத்தினர். ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்ததால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பும் அடைந்தனர். திருமலையின் பாதுகாப்பு குறித்த இந்த அதிரடி ஒத்திகை அங்கிருந்தவர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது.

X

Thanthi TV
www.thanthitv.com