

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கும்பாபிஷேக விழா அடுத்த மாதம் 11ஆம் தொடங்கி 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கும்பாபிஷேக பூஜை நேரத்தை தவிர்த்து குறைவாக உள்ள நேரத்தில் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிப்பது குறித்து பக்தர்களிடமே கருத்துகளை கேட்க வேண்டும் என தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார். இதையடுத்து பக்தர்கள் தங்களது கருத்துகளையும், ஆலோசனைகளையும் வருகின்ற 23ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதற்காக தொலைபேசி எண்கள், இ-மெயில் முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது