tirupati temple || சர்ச்சைக்கு மத்தியில் சாதனை படைத்த திருப்பதி லட்டு - இவ்வளவு கோடியா..!
சர்ச்சைக்கு மத்தியிலும் சாதனை படைத்த திருப்பதி லட்டு
கலப்பட நெய் சர்ச்சைக்கு மத்தியிலும் கடந்த ஆண்டில் திருப்பதி லட்டு பிரசாதம், விற்பனையில் சாதனை படைத்துள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், லட்டு விற்பனை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. 2024-ஆம் ஆண்டில் பக்தர்களுக்கு 12 கோடியே15 லட்சம் லட்டுகள் விற்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 13 கோடியே 52 லட்சமாக உயர்ந்தது.
திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பசு நெய்யின் தரம் குறித்த சர்ச்சை நிலவிய போதிலும், இந்த சாதனை நிகழ்ந்திருக்கிறது. திருப்பதி லட்டுக்கு கடந்த 2009-ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.