திருப்பதி கோயிலில் வசந்த உற்சவம் தொடக்கம்

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வசந்த உற்சவம் கோலாகலமாக தொடங்கியது.
திருப்பதி கோயிலில் வசந்த உற்சவம் தொடக்கம்
Published on

திருப்பதி கோயிலில் ஆண்டும்தோறும் சித்திரை மாத திரயோதசி, சதுர்த்தசி மற்றும் பவுர்ணமி நாட்களில் வசந்த உற்சவம் நடைபெறும். இந்நிலையில் நடப்பாண்டிற்கான வசந்த உற்சவம், ஊரடங்கு உத்தரவு காரணமாக வழக்கத்திற்கு மாறாக கோவிலின் உள்ளே உள்ள ரங்கநாயக்கர் மண்டபத்தில் நடைபெற்றது. வசந்த உற்சவத்தின் முதல் நாளில் மலையப்பசுவாமி ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக எழுந்தருளினார். அப்போது சுவாமிக்கு இளநீர், பன்னீர் மற்றும் மூலிகை திரவியங்களை கொண்டு ஜீயர்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com