திருப்பதி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு அஷ்டபந்தன சமர்பணம் நடைபெற்றது.
திருப்பதி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
Published on
திருப்பதி ஏழுமலையான் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது. இதனையொட்டி கருவறை, துணை சன்னதிகள், கோபுரங்கள் உள்ளிட்டவைகளை மராமத்து செய்யும் பணி நடைபெற்றது. அனந்த நிலையம், தங்க கொடிமரம், மராமத்து பணியும் நடைபெற்றது. மூலவர் சிலைக்கு அடிப்பாகத்தில் உள்ள பீடத்திற்கும், தரை தளத்திற்கும் இடையே 8 வகை பொருள்களால் செய்யப்பட்ட அஷ்டபந்தனம் என்று கூறப்படும் மூலிகை கலவை செலுத்தப்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com