மாற்று சமுதாய இளைஞரை திருமணம் செய்த பெண் மரணம் - ஆணவக் கொலை செய்யப்பட்டாரா?

ஆந்திர மாநிலத்தில் மாற்று சமுதாயத்தை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்த இளம்பெண் ஆணவக் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாற்று சமுதாய இளைஞரை திருமணம் செய்த பெண் மரணம் - ஆணவக் கொலை செய்யப்பட்டாரா?
Published on

ஆந்திர மாநிலத்தில் மாற்று சமுதாயத்தை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்த இளம்பெண் ஆணவக் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ரெட்ல பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தனா. இவர் அதே கிராமத்தை சேர்ந்த வேறு பிரிவை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் குறித்து தெரிய வந்த பெற்றோர் இருவரையும் கண்டித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறிய 2 பேரும் கோயிலில் திருமணம் செய்து கொண்டு மீண்டும் ஊருக்கு திரும்பி வந்தனர். இதைப் பார்த்த உறவினர்கள் 2 பேரையும் பிரித்து அவரவர் வீடுகளில் தங்க வேண்டும் என தெரிவித்தனர். இந்த சூழலில் தன் தந்தை வீட்டில் இருந்த சந்தனா திடீரென உயிரிழந்தார். தன் மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி அவரது பெற்றோர் உடலை எரித்தனர். ஆனால் சந்தனா ஆணவக் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தன்னையும் சந்தனாவின் பெற்றோர் கொலை செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் ஸ்ரீனிவாஸ் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com