கனமழை காரணமாக "ரூ.4 கோடி அளவுக்கு இழப்பு" - திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தகவல்

கனமழை காரணமாக "ரூ.4 கோடி அளவுக்கு இழப்பு" - திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தகவல்
கனமழை காரணமாக "ரூ.4 கோடி அளவுக்கு இழப்பு" - திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தகவல்
Published on

கனமழை காரணமாக "ரூ.4 கோடி அளவுக்கு இழப்பு" - திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தகவல்

கனமழை காரணமாக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு நான்கு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதியில் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்தது. இதனால், திருமலைக்கு நடந்து செல்லும் வழித்தடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், மலை அடிவாரத்தில் உள்ள கபிலேஸ்வரர் கோயிலின் மண்டபம் இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதனிடையே, மழையால் சேதமடைந்த கட்டடங்களை சரி செய்ய நான்கு கோடி ரூபாய் தேவைப்படும் என, தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com