

திருப்பதி அடுத்த அலமேலு மங்காபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மாவதி தாயார் திருக்கோவிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவ விழா கோலகலமாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளில் பத்மாவதி தாயார் கஜ வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். கொரோனா பாதுகாப்பு காரணமாக கோவில் ஊழியர்கள் மட்டும் விழாவில் கலந்து கொண்டனர்.