திப்பு ஜெயந்தி விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் - கர்நாடக துணை முதலமைச்சர்

கர்நாடகாவில் வரும் 10ஆம் தேதி, 'திப்பு ஜெயந்தி' விழா, அரசு விழாவாக கொண்டாடப்படும் என அம்மாநில துணை முதல்வர் பரமேஸ்வர் அறிவித்துள்ளார்.
திப்பு ஜெயந்தி விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் - கர்நாடக துணை முதலமைச்சர்
Published on

கர்நாடகாவில் வரும் 10ஆம் தேதி, 'திப்பு ஜெயந்தி' விழா, அரசு விழாவாக கொண்டாடப்படும் என அம்மாநில துணை முதல்வர் பரமேஸ்வர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக, உயர் அதிகாரிகளுடன் விதான் சவுதா சட்டப்பேரவை வளாகத்தில் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனை கூட்டத்தில் உள்துறை செயலாளர், கர்நாடக மாநில டிஜிபி, பெங்களூரு காவல் ஆணையர் சுனில் குமார் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் பரமேஸ்வர், பல முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com