மின் கம்பியை லேசாக உரசிய டிப்பர் லாரி..லாரியுடன் சேர்ந்து உயிரோடு கருகிய ஓட்டுநர்

x

மின்கம்பி மீது மோதிய டிப்பர் லாரி எரிந்து ஓட்டுநர் உயிரிழப்பு

தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உயர் அழுத்த மின்கம்பி மீது டிப்பர் லாரி மோதி தீப்பற்றி எரிந்ததில், லாரி ஓட்டுநர் தீயில் கருகி உயிரிழந்தார். காஜுப்பள்ளியில் உள்ள கிரஷரில் ஜல்லி உடைப்பதற்காக, லாரியில் பாறைகளை ஏற்றிக் கொண்டு வந்த அவர், டிப்பர் லாரியை உயரே தூக்கியபோது, லாரி மீது உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதில், லாரி ஓட்டுநர் ரன்சுஜன் உடல் கருகி உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்