"பழிக்கு பழி வாங்குவோம்" : கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மாவோயிஸ்ட்கள் மிரட்டல் கடிதம்

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மிரட்டல் கடிதம் எழுதியுள்ளனர்.
"பழிக்கு பழி வாங்குவோம்" : கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மாவோயிஸ்ட்கள் மிரட்டல் கடிதம்
Published on

அம்மாநிலத்தின் வடகரா போலீஸ் நிலையத்திற்கு வந்த கடிதத்தில், கேரள அதிரடிப்படையின் நடவடிக்கையால் தங்களது சகாக்கள் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்திற்கு பழிக்கு பழி வாங்குவோம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் பேராம்பறை காவல்நிலைய அதிகாரி ஹரீசுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என்றும், இந்த கடிதத்தில் மாவோயிஸ்டுகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com