"புகார் அளிக்க வருபவர்களை கண்ணியமாக நடத்த வேண்டும்" - சுப்ரீம் கோர்ட்

x

காவல்நிலையத்துக்கு குற்றங்கள் குறித்து புகார் அளிக்கச் செல்லும் நபர்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என, உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பணமோசடி குறித்து புகார் அளிக்கச் சென்ற நபரிடம் தவறாக நடக்க முற்பட்டு, புகாரை பதிவு செய்ய மறுத்ததற்காக, தமிழ்நாடு மனித உரிமை ஆணையம், 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. இதை எதிர்த்து காவல் ஆய்வாளர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் அபய் எஸ் ஒகா, உஜ்ஜல் புயன் ஆகியோர், அபராதத்தை உறுதி செய்ததுடன், புகார் அளிக்கச் செல்லும் நபர்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்