``சவாலுக்கு இதான் தரமான பதில்’’ - இந்தியாவின் மெகா சம்பவம்
இந்தியா ஐரோப்பாவோடு போட்ட ஒப்பந்தம்
உலகளாவிய சவால்களுக்கு ஒத்துழைப்புதான் சிறந்த பதில் என ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் Ursula von der Leyen தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஐரோப்பியா இடையேயான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் மூலம் இருதரப்பு இடையே கூட்டு உற்பத்தி சக்தி வலுப்பெறும் எனவும்,
லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாகும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய சேவை அளவை ஐரோப்பாவின் தொழில்நுட்பம், மூலதனம் மற்றும் புதுமைகளுடன் ஒன்றிணைக்கும் ஒப்பந்தம் என சுட்டிக்காட்டியுள்ள உர்சுலா,
பாதுகாப்பு துறையில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ள இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்பு மேலும் மேம்படுத்தப்படும் என்றும் கருத்து பகிர்ந்துள்ளார்.
Next Story
