திருவனந்த‌புரம் மாவட்ட ஆட்சியரின் சர்ச்சை பதிவுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்

திருவனந்த‌புரம் மாவட்ட ஆட்சியரின் சர்ச்சை பதிவுக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பு
திருவனந்த‌புரம் மாவட்ட ஆட்சியரின் சர்ச்சை பதிவுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்
Published on
திருவனந்தபுரத்தில் வெள்ள நிவாரண பொருட்கள் சேகரிக்கும் பணியில் தன்னார்வலர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 9 ஆம் தேதி திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியர் கோபாலகிருஷ்ண‌ன், தனது சமூக வலைதளபக்கத்தில், கேரளாவின் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு, வெள்ள நிவாரண பொருட்கள் தேவைப்படவில்லை என கூறி, பதிவிட்டிருந்தார். இந்த பதிவு வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கி தவிக்கும் மக்களை மட்டுமல்லாது, அவர்களுக்காக நிவாரணப் பொருட்கள் சேகரித்து வந்த தன்னார்வலர்களையும் ஆத்திரம் மூட்டியது. இந்த நிலையில், ஆட்சியரின் பதிவை கண்டுகொள்ளாத தன்னார்வலர்கள் பலர் திருவனந்தபுரத்தில் நிவாரண பொருட்கள் சேகரித்து வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com