ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர வசந்த உற்சவம்

ஸ்ரீதேவி பூதேவி உடன் மலையப்ப சாமி தங்க தேரில் வீதி உலா
ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர வசந்த உற்சவம்
Published on
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர வசந்த உற்சவம் நேற்று தொடங்கிய நிலையில் இன்று 2ஆம் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை ஸ்ரீதேவி பூதேவி உடன் மலையப்ப சுவாமிகள், வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். இதைத்தொடர்ந்து மதியம் இளநீர், பன்னீர் மற்றும் மூலிகை திரவியங்களை கொண்டு சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.இதைத்தொடர்ந்து, தங்கத்தேரில் ஸ்ரீதேவி பூதேவி உடன் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com