

திருப்பதி அடுத்த அலமேலு மங்காபுரம் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று, பெரிய சேஷ வாகனத்தில் மகா விஷ்ணு அலங்காரத்தில் சங்கு சக்கரத்துடன் பத்மாவதி தாயார்
எழுந்தருளினார். ஜீயர்கள் திவ்ய பிரபந்தம் பாட, அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க, காட்சி தந்த பத்மாவதி தாயாரை
பக்தர்கள் தரிசனம் செய்தனர். பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று இரவு அன்ன வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருள உள்ளார்.