பாகல்பூர்||பீகாரில் ஓடும் ரயிலில் செல்போன் பறிக்க முயன்று சிக்கிய திருடன்
பீகாரில் ஓடும் ரயிலில் செல்போன் பறிக்க முயன்று சிக்கிய திருடன்
பீகார் மாநிலம் பாகல்பூர் அருகே, ஓடும் ரயிலில் பயணியின் செல்போனை பறிக்க முயன்ற திருடன், ஜன்னலில் தொங்கியபடியே தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகல்பூர் மாவட்டம் சிவநாராயண்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மெதுவாக புறப்பட்டபோது, ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த பயணியின் செல்போனை வெளியே நின்றிருந்தவாறு அந்த நபர் பறிக்க முயன்றுள்ளார்.
ஆனால் பயணியும் அருகில் இருந்தவர்களும் உடனடியாகச் சுதாரித்துக்கொண்டு அந்த திருடனின் கையை ஜன்னல் வழியே இறுகப் பற்றிக் கொண்டனர். பயணிகள் கையை விடாததால், நடைமேடையில் சில தூரம் ஆபத்தான முறையில் தொங்கியபடியே அந்த திருடன் இழுத்து செய்யப்பட்ட நிலையில், கடைசியாக கீழே விழுந்து காயமடைந்த திருடனை ரயில்வே காவலர்கள் உடனடியாகக் கைது செய்தனர்..
