ரசிகர்களால் நேர இருந்த அபாயம்..! அலறிய மக்கள்.. டென்ஷனில் விளாசிய சல்மான் கான்

நடிகர் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் உருவாகியுள்ள 'டைகர்- 3, தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகி உள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவின் மாலேகான் நகரில் உள்ள ஒரு திரையரங்கில் ரசிகர்கள் சிலர் தியேட்டருக்கு உள்ளேயே பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனால், திரையரங்கம் முழுவதும் புகை மண்டலமானதை அடுத்து, இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், வழக்குப் பதிவு செய்து, 2 பேரை கைது செய்தனர். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் சல்மான் கான், திரையரங்கில் பட்டாசு வெடிப்பது ஆபத்தானது என்றும், நமக்கும் பிறருக்கும் ஆபத்தை ஏற்படுத்தாமல் படத்தை ரசிப்போம் என்று பதிவிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com