தி.மலை கிரிவல பாதையில் பரபரப்பு,.. பெண்களை இழிவாக திட்டியதால் அதிர்ச்சி
திருவண்ணாமலையில், சித்ரா பெணர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இந்நிலையில், பக்தர்களின் வசதிக்காக கிரிவலப்பாதை உள்ளிட்ட இடங்களில், மாவட்ட நிர்வாகம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட கழிவறைகள் மற்றும் தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை கட்டணம் இன்றி செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இந்நிலையில், கிரிவலப் பாதையில் உள்ள ஒரு கழிவறையில், நபருக்கு பத்து ரூபாய் பணம் வசூலித்ததுடன், தூய்மையாக பராமரிப்பது குறித்து கேள்வி எழுப்பிய பெண்களை, அங்கிருந்தவர் திட்டியதால் ஆத்திரமடைந்த பெண்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Next Story
