

தென் பெண்ணை ஆற்றுநீர் பங்கீடு மற்றும் யர்கோல் பகுதியில் கர்நாடகா அணை கட்டுவதை தடுக்கக் கோரி, தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், மத்திய அரசை அணுகுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, நதிநீர் பங்கீடு தொடர்பாக தீர்ப்பாயம் அல்லது குழுவை அமைக்கக் கோரி, மத்திய அரசிடம் தமிழக அரசு சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் அதனை ஏற்று, இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த குழுவை அமைத்து, மத்திய அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் 24ம் நடைபெறும் குழுவின் முதல் கூட்டத்தில், இரு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு பிரச்சனைக்கு, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.