தேக்கடி : வனத்துறையினரை கண்டித்து தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் போராட்டம்

கேரள மாநிலம் தேக்கடி சுற்றுலாத்தலத்தில், அம்மாநில வனத்துறையினரை கண்டித்து தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேக்கடி : வனத்துறையினரை கண்டித்து தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் போராட்டம்
Published on

கேரள மாநிலம் தேக்கடி சுற்றுலாத்தலத்தில், அம்மாநில வனத்துறையினரை கண்டித்து தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேக்கடி பகுதிக்கு வரும், சுற்றுலா பயணிகளுக்கு கேரள வனத்துறை மற்றும் தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் சார்பில் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வனத்துறைக்கு சொந்தமான வாகன நிறுத்தத்தில், தங்களது வாகனங்களையும் நிறுத்த அனுமதிக்கக் கோரி, தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் வனத்துறை வாகனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வாகன​ங்கள், தேக்கடி செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டன.

X

Thanthi TV
www.thanthitv.com